மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசம் பற்றி நாம் நன்கு அறிவோம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த மாபெரும் யுத்தமே மகாபாரதம் ஆகும். குருஷேத்திர போரில் கிருஷ்ணர் பாண்டவர்களின் புறம் இருந்தாலும் அவர் போரில் ஆயுதமேந்தி போரிடவில்லை.
கிருஷ்ணர் போரில் ஆயுதமேந்தி போரிடாமல் இருந்ததற்கும், துரியோதனனுக்கு தன் நாராயணி சேனையை வழங்கியதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் துரியோதனனுக்கும், கிருஷ்ணருக்கும் இருந்த நெருங்கிய முறையாகும். இவர்களின் உறவுமுறை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிருஷ்ணர்
கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி, குரு என பல முறைகளில் உதவி புரிந்தார் என்பதை நாம் அறிவோம் ஆனால் அவர் கௌரவர்களுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுமுறை பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிருஷ்ணரின் முக்கியத்துவம்
மகாபாரதம் படித்த அனைவருக்குமே நன்கு தெரியும் கிருஷ்ணர் திரௌபதியின் பாதுகாவலவராகவும், உற்ற தோழனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார் என்று. ஆனால் கிருஷ்ணர் ஏன் கௌரவர்களுக்கு உதவி இல்லை என்று கூறமுடியாமல் போனது தெரியுமா? ஏனெனில் இவர் கௌரவர்களுடன் கொண்டிருந்த உறவு அப்படி.
துரியோதனன் – கிருஷ்ணன் உறவினர்களா?
ஆமாம். துரியோதனனும், கிருஷ்ணரும் சாஸ்திரம் மற்றும் சட்டங்களின் படி நெருங்கிய உறவினர்கள் ஆவர். ஆனால் இந்த உறவுமுறை துரியோதனன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கிருஷ்ணர் எப்பொழுதும் அவரின் இல்லையா கடக்காமல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அந்த உறவுமுறைக்கு மதிப்பளித்தார்.
அப்பாவை போல பிள்ளை
குருஷேத்திர போர் நடப்பதற்கு சில காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணரின் மகன் சாம்பா துரியோதனனின் மகள் லக்ஷ்மணாவை கிருஷ்ணர் எப்படி ருக்மணியை தூக்கிக்கொண்டு வந்து திருமணம் செய்தாரோ அதேபோல திருமணம் செய்து கொண்டான். இதனால் கிருஷ்ணரும், துரியோதனனும் சம்பந்தி முறையினர் ஆவர்.
கிருஷ்ணரின் தலைமை மனைவிகள்
கிருஷ்ணருக்கு மொத்தம் 8 தலைமை மனைவிகள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் முறையே ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, மித்ரவிந்தா, நாகநஜீதி, லக்ஷ்மணா, பத்ரா மற்றும் களிண்டி ஆகும். சாம்ப கிருஷ்ணருக்கும், ஜாம்பவதிக்கும் மகனாக பிறந்தவன் ஆவான். இவனும் இவனின் தந்தையை போல பல குறும்புகள் செய்தான்.
கிருஷ்ணரின் தவம்
கிருஷ்ணரின் கடுமையான தவத்திற்கு பின்னரே சாம்பா பிறந்தான். அவரின் நோக்கத்தாலும், தவத்தாலும் மகிழ்ந்த சிவன் அவர் விரும்பிய வரத்தை அவருக்கு தந்தார். கிருஷ்ணர் சிவன் போலவே தனக்கு ரூ மகன் வேண்டுமென்று வரம் கேட்டார். சிவன் அழிவின் கடவுள் என்பதை நாம் நன்கு அறிவோம். பின்னாளில் யாதவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது சாம்பாதான்.
லக்ஷ்மணா
துரியோதனனுக்கும், பானுமதிக்கு லக்ஷ்மணா என்னும் மகள் பிறந்தாள். அவள் திருமண வயதை எட்டியவுடன் துரியோதனன் அவளுக்கு திருமண செய்து வைப்பதற்காக சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். சுயம்வரம் என்பது தந்தையால் மகளுக்கு பொருத்தமான மாப்பிளையை தேர்வு செய்ய நடத்தப்படும் சடங்காகும். பல இளவரசர்கள் இந்த சுயம்வரத்தில் கலந்துகொண்டனர்
கடத்தல்
சாம்பாவிற்கும், லக்ஷ்மணாவிற்கும் முன்கூட்டியே ஒருவரையொருவர் பிடித்து விட்டது. எனவே சுயம்வரம் தொடங்குவதற்கு முன்பே சாம்பா அரணமனைக்குள் புகுந்து லக்ஷ்மணாவை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். ஆனால் அதற்கு பிறகு அவன் கௌரவ சேனையால் சுற்றி வளைக்கப்பட்டு அவனின் செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டான்.
சுயம்வரம்
சுயம்வரத்தில் மற்ற இளவரசர்கள் யாரும் லக்ஷ்மணாவை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. லக்ஷ்மணா ஏற்கனவே இன்னொருவனை கவர்ந்து செல்லப்பட்டதால் ருக்மணி எப்படி கிருஷ்ணரை மணந்து கொண்டார்களோ அதேபோல லக்ஷ்மணாவும் சாம்பாவைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
துரியோதனனின் மறுப்பு
இதற்கிடையில், கிருஷ்ணாவின் மூத்த சகோதரர் பலராமன், சாம்பா அஸ்தினாபுர சிறையில் அடைக்கப்பட்டது அறிந்து கடும் கோபமுற்றார். அவர் துரியோதனனிடம் சாம்பாவை விடுதலை செய்து தனது மகளுக்கு மணம் முடித்து வைக்கும்படி துரியோதனனிடம் கூறினார். ஆனால் பாண்டவர்களின் ஆதரவாளரான கிருஷ்ணரின் மகனை தன் மகளுக்கு மணம் முடிக்க துரியோதனன் மறுத்துவிட்டான்.
பலராமரின் மிரட்டல்
துரியோதனனின் முடிவால் கோபமுற்ற பலராமர் சாம்பாவை பலவந்தமாக விடுவிக்க முயற்சி செய்தார். கௌரவ சேனை அவரை தடுக்க முயலவே அனைவரையும் கொல்ல துவங்கினார் பலராமர். அவர் சாம்பாவை விடுவிக்கவில்லை எனில் மொத்த அஸ்தினாபுரத்தையும் கங்கையில் மூழ்கடித்த விடுவதாக கூறினார்.
கந்தர்வ திருமணம்
கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு பயந்த துரியோதனன் அவர்களின் ஆணையை ஏற்று சாம்பாவை விடுதலை செய்தான், விருப்பம் இல்லையென்றாலும் தன் மகளை சாம்பாவிற்கு மணம் முடிக்க ஒப்புக்கொண்டான். அவர்களின் திருமணம் கந்தர்வ முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது.