Loading...
இவ் வருடத்தில் இதுவரையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.
எயிட்சினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமல் இருந்ததே மரணங்கள் அதிகரிக்க காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
இதன்படி, தற்போது வரை நாட்டில் எயிட்ஸ் நோய் காரணமாக 405 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதோடு இவ்வருடத்தில் இதுவரை 215 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Loading...