கோடைக்காலங்களில் தான் மோரை அதிகம் பருகுவோம். இங்கு அத்தகைய மோரை எப்படி சுவையாக செய்து குடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு…
பச்சை மிளகாய் – 1/2
கறிவேப்பிலை – 3 இலை
இஞ்சி – 1/4 இன்ச்
செய்முறை:
தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை மோரில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த மோர் மிளகாயை மோரில் உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், சூப்பரான மசாலா மோர் ரெடி!!!