12-வது ஐபிஎல் சீசன் தொடரின் 5-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர் வாட்சன் நிதானமாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
போட்டியின் நடுவில், தோனி விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் தோனியை உற்சாகப்படுத்தினர், அப்போது அவருடைய மகள் ஸிவா தோனியும், மைதானத்தில் இருந்து ‘கோ பாப்பா’ என கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்கலிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது.