அவலில் புட்டு, பாயாசம், உப்புமா என்று பல்வேறு உணவுகளை செய்து இருப்பீங்க. இன்று எலுமிச்சை அவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் – 1 கப்
எலுமிச்சை – 1
பெருங்காயத் தூள் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 2
வேர்க்கடலை – கால் கப்
கடுகு, மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை சில நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் வேர்க்கடலையை கொட்டி கிளறிவிடவும்.
பின்னர் அவல், உப்பு சேர்த்து கிளறுங்கள்.
வெந்ததும் கீழே இறக்கி எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்.