கிளிநொச்சி எம்.ஜி.ஆர் என சமூகவலைத்தளங்களில் ஒரு சமயத்தில் எள்ளல் தொனியில் குறிப்பிடப்பட்ட கேணல் ரத்னப்பிரியவை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இழப்பீடு வழங்கும் பணியகத்திற்கான ஆணையாளர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து ஆணையாளர்களுள் ஒருவராக, கேணல் ரத்னப்பிரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏஏஎம்.பதிஹூ, கேணல் ரத்தனப்பிரிய ஆகியோரே ஆணையகத்தின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த, போட்டி செயன்முறைகளின் மூலம் ஆணையாளர்கள் தெரிவு இடம்பெற்றதாக நல்லிணக்க பொறிமுறைகளிற்கான ஒருங்கிணைப்புச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடு வழங்கும் நோக்குடன், இந்த வரவு செலவு திட்டத்தில் 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு, இழப்பீட்டு பணியகம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கேணல் ரத்னப்பிரிய முன்னர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக செயற்பட்டார். அவர் அங்கிருந்து இடமாற்றம் பெற்றபோது பலர் அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.