தினப்பலன் ஏப்ரல் – 7-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கின்றது. ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உங்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு செய்வார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கடகம்
கடகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதனை படைக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திருப்பங்கள் நிறைந்த நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். புது நட்பு மலரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங் களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.
மகரம்
மகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.
மீனம்
மீனம்: குகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.