இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக சமகாலத்தில் மின்சார விநியோகம் பகுதியளவில் துண்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் துண்டிக்கப்படும் மின்விநியோக தடை நேரத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினை காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனாலும் நாட்டில் அதிகரித்த மின்சார கோரிக்கை மற்றும் அதற்கு ஏற்ப மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலைக்கு மத்தியில் மின்சார துண்டிப்பு நேரம் நீடிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது பகல் நேரத்தில் 3 மணித்தியாலங்களும் இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனை மேலும் சில மணித்தியாலங்களால் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக சபை அறிவித்துள்ளது.
நாட்டில் கடும் வெப்பநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் மின்சார துண்டிப்பும் மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.