சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப் பிதுங்க வைத்துள்ளார்.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்லும் எனக்கு ஹிந்தியில் பேசியது தவறு. தமிழ் மொழியில் பேசியிருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
முதலில் ஆங்கிலம் இருந்தது அதனை அழுத்தி அதன் பின்னர் தமிழ் மொழியினை தெரிவு செய்திருந்தேன். ஆனால், என்னிடம் ஹிந்தியில் தான் பேசினார்கள். அது தவறு என்றும் குறித்த நபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தினை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சமூகவாசிகள் அவரை பாராட்டியுள்ளனர்.
ஒவ்வொரு தனி மனிதனும் விரும்பிய மொழியில் பேசும் உரிமை உண்டு. அது மாத்திரம் இன்றி அவரின் உரிமை மீறப்படும் போது அதனை தட்டி கேட்கும் சுதந்திரமும் உண்டு.
இதேவேளை, தமிழர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் வாடிக்கையாளர் நிலையத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.