Loading...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் பொது மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். திடீரென அதிகரித்துள்ள வெப்ப நிலையால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பொருளாதார பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் மலையக பகுதியில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக தேயிலை உற்பத்தி நூற்றுக்கு 40 சதவீதம் அளவில் சரிவடைந்துள்ளதாக கீழ் நாட்டு சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதனுடன் தேயிலை தொழிற்துறையில் நாளாந்த தேயிலை கொள்ளளவை பெற முடியாமையினால், உற்பத்தி செலவு அதிகரிக்கும் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...