மேஷம்
ராகு, சுக்கிரன், குரு, சந்திரன் சிறப்பான பலன் வழங்குவர். பணிகளில் சுறுசுறுப்பும் நேர்த்தியும் இருக்கும். உடன்பிறந்தோர் இணக்கத்துடன் இருப்பர். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். வீடு, வாகனத்தில் பாதுகாப்பில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் ஆர்வக் கோளாறால் குளறுபடி ஏற்படலாம். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்..மனைவியின் நற்செயல்களை பாராட்டுவீர்கள்; தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதன் மூலம் வளர்ச்சி கூடும். பணியாளர்கள் கேட்ட கடனுதவி கிடைக்கும். பெண்கள், கணவரின் அன்பு பாசத்தில் திளைப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: குரு வழிபாடு சுபவாழ்வு தரும்
ரிஷபம்
சூரியன், புதன், குரு, சந்திரன் அனுகூலமான இடத்தில் உள்ளதால் மனதில் வேகமும், செயலில் உற்சாகமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். தாய்வழி உறவினர் உதவுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வர். உடல்நலம் சீராக இருக்கும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை பெறுவர். பெண்களின் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் அதிக முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வெற்றியளிக்கும்.
மிதுனம்
சூரியன், புதன், சுக்கிரன், குரு ராஜயோக பலன் தருவர்; திட்டமிட்ட காரியம் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும்; வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், உற்பத்தி விற்பனை செழித்து வளரும். அரசு உதவி எளிதாக கிடைக்கும். பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் விரும்பிய புத்தாடை நகை வாங்குவர். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோரிடம் பாராட்டும், பரிசும் பெறுவர்.
பரிகாரம்: பசு வழிபாடு செல்வ வளம் தரும்.
கடகம்
கேது, சனி, சுக்கிரன், செவ்வாய் அளப்பரிய நற்பலன் தருவர். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நற்பெயரும், புகழும் தேடி வரும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி, வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கில் வெற்றி கிடைக்கும். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன், கலைகளும் பயில்வர்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.
சிம்மம்
ராகு, புதன், குரு, சந்திரனால் நன்மை உண்டாகும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். செயல்களில் நேர்த்தி இருக்கும். உடன்பிறந்தோருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பூர்வ சொத்தில் பணவரவு உண்டு. பிள்ளைகள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவர், கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்: சிவன் வழிபாடு நன்மை தரும்.
கன்னி
சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவார். பேச்சில் நிதானம் வேண்டும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கி, படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்;. மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்கவும். பணியாளர்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் குடும்ப நலன் பாதுகாத்திடுவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
சந்திராஷ்டமம்: 7.4.19 காலை 6:00 மணி – 8.4.19 பகல் 3:32 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
துலாம்
பெரும்பான்மை கிரகங்கள் அனுகூலமாக உள்ளதால் புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகன பயன்பாடு அதிகரிக்கும்; பிள்ளைகள் உங்களுடன் இணக்கமாக நடந்து கொள்வர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் செயல்களில் சிறு குளறுபடி வரலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணியாளர் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற்று சலுகை பெறுவர். பெண்கள் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம்: 8.4.19 பகல் 3:33 மணி – 10.4.19 இரவு 8:57 மணி
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.
விருச்சிகம்
குரு, சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை அடைவீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வதன் மூலம் மன அமைதியை பாதுகாக்க முடியும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் தங்கள் நற்செயல்களால் பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். இஷ்டதெய்வ வழிபாட்டால் வழக்கில் வெற்றி கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பாசத்துடன் பழகுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும்;. பெண்கள் புத்தாடை நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டமம்: 10.4.19 இரவு 8:58 மணி – 12.4.19 இரவு 12:32 மணி
பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
தனுசு
புதன், சுக்கிரன், செவ்வாய், சந்திரனால் அதிக நற்பலன் உண்டு. அன்புக்கு உரியவரின் ஆலோசனை உற்சாகம் தரும்; மனதில் தெளிந்த சிந்தனை பிறக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு நல்வழியில் செயல்படுவார். பணப் வரவு அதிகரிக்கும். உடல் நலம் சீராக இருக்கும். எதிரிகள் விலகுவர். மனைவியின் செயல்பாடுகள் குடும்ப நலனை பாதுகாக்கும். தொழில் வியாபாரத்தை மேம்படுத்த பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை பளு ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவர். .மாணவர்கள் படிப்புடன், கலைகளிலும் ஆர்வர் கொள்வர்.
சந்திராஷ்டமம்: 12.4.19 இரவு 12:33 மணி – 13.4.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
மகரம்
சூரியன், சுக்கிரன், ராகு, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து வெளிப்படும். மனதில் தைரியம் வளரும். சகோதரர்கள் உதவுவர். வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளை இதமாக வழி நடத்தி படிப்பு செயல்திறனில் முன்னேற்றுவீர்கள். குலதெய்வ அருள் உண்டு. கடன் வாங்குவதில் நிதானம் வேண்டும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீரான வளர்ச்சி பெறும். பணியாளர் பணியிடத்தின் சூழல் அறிந்து பணிபுரிய வேண்டும். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
பரிகாரம்: மீனாட்சி வழிபாடு வெற்றியளிக்கும்.
கும்பம்
கேது, சுக்கிரன், குரு, சனீஸ்வரர் அளப்பரிய நற்பலன் வழங்குவர். நண்பரால் உதவி உண்டு. மனதில் தைரியம் வளரும். இஷ்ட தெய்வ அருளால் திட்டமிட்ட பணி நிறைவேறும். நடைமுறை வாழ்வு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் பிரச்னை குறையும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி உங்களின் நற்குணங்களை பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர். சலுகையும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன்களை பேணிக்காத்திடுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம்; காண்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
மீனம்
சுக்கிரன், செவ்வாய், சந்திரன் அனுகூல பலன் தருவர்;.மனதில் உத்வேகமும், செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை வசதிக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். எதிர்கால தேவை கருதி பணம் சேமிப்பீர்ள். உறவினர்கள் நல்ல ஆலோசனை சொல்வர். மனைவியின் அன்பு, பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமாக செழித்து வளரும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு சகல நலமும் தரும்.