யாழ் மாநகரசபை சுகாதார பிரிவு தொழிலாளர்கள் ஒன்பதாவது நாளாக இன்று (15-11-2016) செவ்வாய்க்கிழமை காலை பருத்தித்துறை வீதியில் உள்ள யாழ் மாநாகரசபை அலுவலகத்திற்கு முன் பணிமுடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பணிமுடக்கத்தில் ஈடுபட்டிருந்த போது யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்ததோடு கதவைத்திறந்து உத்தியோகத்தர்களை விடும்படி கூறிய போது போராட்டித்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாருடன் முரன்பட்டிருந்தார்கள். தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சகர் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் உதயகுமாருடன் சிலமணி நேரம் தொடர்ந்து நடாத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மாநகரசபை ஊழியர்கள் உற்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பணிமுடக்கப்போராட்டம் குறித்து வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில் …
நாங்கள் நீதிக்கு புறம்பாகவோ அல்லது பொலிஸாருக்கு மற்றும் இரானுவத்திற்கு எதிராக எந்த தீங்கும் விளைவிக்கவில்லை. நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்காக தான் இந்த போராட்டத்தை நடாத்தினோம். பொலிஸ் அத்தியட்சகர் வந்து பொறுப்பேடுத்திருக்கின்றார். நாளை காலை பத்து மணிக்கு எங்களுக்கு சரியான தீர்வு வழங்குவோம் என்று இன்று உத்தியோகத்தர்களை பொலிஸார் கேட்டமைக்கு இணங்க உற்சொல்ல அனுமதித்திருக்கின்றோம். நாளை நாளில் தாங்களும் கதவடைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தமையால் உற்செல்ல அனுமதித்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரைக்கும் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டித்தில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.
நாளைய தினம் நிரந்தர நியமனம் கோரும் சுகாதார தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்குமா?