Loading...
கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் கோயிலாமனை பகுதியை சேர்ந்த சி . சற்குனரத்தினம் (வயது 55) என்பவரே உயிரிழந்தவராவார்.
Loading...
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை திடீரென கிணற்றடியில் மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அவதானித்த வீட்டார் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர். தெரிவித்துள்ளார்.
Loading...