நீங்கள் பிறந்த மாதம், உங்கள் வாழ்வில் முக்கியமான பங்காற்றுகிறது. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஆரம்பகட்ட ஆய்வுகள், ஒருவர் எந்த மாதம் பிறந்தார் என்பதற்கும், அவரது வாழ்க்கைக்கும் அதிகமான தொடர்பு உள்ளது என்பதை காட்டுகின்றன.
இந்தத் தொடர்பு, இது குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு புதிராகவே உள்ளது. உங்களுடைய பிறந்த மாதத்தை வைத்து எப்படி உங்களுக்குள் வாழ்க்கையில் மறைத்து வைத்திருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி இங்கே விளக்கப்படுகிறது. அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரையாக அமைகிறது.
பிறந்த மாதம் ‘பிறந்த மாதத்திற்கேற்ப வாழ்க்கை அமையும்’ என்பது கேட்பதற்கு சற்று விசித்திரமாகவே தோன்றும். பிறந்த மாதத்திற்கான கால சூழ்நிலைக்கும் அவரது வாழ்வின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது. சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்படுவது இருக்கட்டும்; இப்போது உங்கள் பிறந்த மாதம் உங்களைக் குறித்து என்னதான் கூறுகிறது என்று பார்த்து விடுங்களேன்.
ஜனவரி
ஒன்றாம் எண், நீங்கள் சுதந்திரமானவர், எதையும் ஆராய்ந்து கணக்கிடுபவர் என்று கூறுகிறது. நீங்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர். நீங்கள் புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர் என்றும், காரியங்களை எப்படியாவது நடத்திக் காட்டி விடுபவர் என்றும் உங்களை சுற்றியிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். வேறு எதைக் குறித்தும் யோசிக்காமல், மற்றவர்கள் உங்கள் தலைமையை ஏற்று பின்பற்றி வருமளவுக்கு நீங்கள் கவர்ச்சிகர ஆளுமையாக விளங்குவீர்கள். ஜனவரி மாதம் பிறந்தவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்திற்கான எண் இரண்டு. நீங்கள் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பார்கள். உண்மையான அன்பைத் தேடி அலைபவர்கள். அன்பு காட்டும் உறவே உங்கள் உலகம். இளம் வயதில் பெண்களே முக்கிய பங்கு வகிப்பார்கள். ‘காதல்’ உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்
மார்ச்
மூன்றாம் எண்ணின் ஆளுகைக்கு உட்பட்ட நீங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் போய் நிற்பீர்கள். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு. பணத்தை ஏராளமாய் சம்பாதிப்பீர்கள்; அதே வேகத்தில் இழந்தும் போவீர்கள். கொஞ்சம் வஞ்சிக்கக்கூடிய தன்மை உங்களுக்கு உண்டு. ஆகவே, ஏதாவது உறவை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்திற்கு ஏற்ற எண் நான்காகும். பிடிவாதம், மற்றவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் எஜமான்தன்மை போன்றவை உங்கள் குணங்கள். மிகவும் புத்திக்கூர்மையும், புதியவற்றை உருவாக்கும் கிரியேட்டிவ் திறனும் உங்களுக்கு உண்டு. உங்கள் தலைமை பண்பும், கவர்ச்சிகர ஆளுமையும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சிஷ்யர்களை பெற்றுத்தரும்.
ஆனால், ரொம்பவே எஜமான் தோரணை காட்டி மற்றவர்களை விரட்டி விட்டு விடாமல் கவனமாக இருங்கள். இந்த மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும். லிம்போமா என்னும் இரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய் (NHL) பாதிப்புக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கும்.
மே
உங்களைப் பற்றி நீங்களே கொடுக்கும் பிம்பம் உங்கள் வாழ்வில் முதன்மையானது. மிகச்சிறந்த இசை வல்லுநராக, தேர்ந்த நடிகராக, புகழ்பெற்ற எழுத்தாளராக நீங்கள் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். திருமணம் உங்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் புனிதமான ஒன்று. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பீர்கள். கலகலப்பாக இருக்கும் குணம் உள்ளவர். ஆகவே, எப்போதும் நண்பர்களுடனே இருப்பீர்கள். இந்த மாதம் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு திறனோடு தொடர்புடைய சில விசித்திர குறைபாடுகளை கொண்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஜூன்
ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான எண் ஆறு. நீங்கள் ரோமியோ, ஜூலியட் போல ரொமண்டிக் பேர்வழியாக இருப்பீர்கள். கொஞ்சம் பொறாமைபிடித்த ஆசாமி நீங்கள். காதலில் அசத்துபவர். ரொம்ப தைரியமானவர். உங்கள் காதல் வாழ்வு கொஞ்சம் சிக்கலாகவே போய்க்கொண்டிருக்கும். குழந்தைகளை விட, முதியவர்களோடு நேரம் செலவிடவே உங்களுக்கு அதிக பிடிக்கும். இந்த மாதம் பிறந்தவர்களுக்கு தற்கொலை எண்ணம் கொஞ்சம் அதிகமாம். ஜாக்கிரதையாக இருங்கள்.
ஜூலை
யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் உங்கள் நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே இருக்கும். பொதுவாக அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனால், சந்தோஷமாகி விட்டால் அல்லது பதற்றப்பட்டு விட்டால் உங்கள் மறுபக்கம் மற்றவர்களுக்கு தெரிந்து விடும்.
கடின உழைப்பு, நேர்மை இரண்டும் உங்களுக்கு நற்பெயர் ஈட்டித் தரும். மற்றவர்களின் உணர்வுகளை ரொம்பவே மதிப்பீர்கள். ஆகவே, மற்றவர்கள் உங்களை நண்பராய் நினைப்பார்கள். மூடு மாறிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதர் நீங்கள். எளிதில் காயப்பட்டு விடக்கூடியது உங்கள் மனம். மன்னிப்பது உங்கள் குணம். பழிவாங்கும் குணம் அற்றவர்.
ஆகஸ்ட்
ஜோக் அடிப்பது உங்களுக்கு கை வந்த கலை. சுற்றியிருப்பவர்களை குறித்து அக்கறை கொண்டவர்கள் நீங்கள். பயம் என்றால் என்ன என்று தெரியாதவர். ஆகவே, உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்வீர்கள். மிகவும் உதாரமாக உதவும் குணம் கொண்டவர். மற்றவர்களை ஆறுதல்படுத்துபவர். ஈகோ கொஞ்சம் தூக்கலான ஆள் நீங்கள். சுதந்திரமாக யோசிக்கும் திறன், உங்களை தலைவராக மிளிர வைக்கும். உற்சாகம், கவலை இரண்டுக்கும் மாறி பயணப்படுவீர்கள். அது நீங்கள் பிறந்த மாதத்தினால் ஏற்படுவது.
செப்டம்பர்
ஒன்பதாம் எண்ணின் ஆளுகையில் உள்ளவர் நீங்கள். உங்கள் புத்திக்கூர்மையும், விட்டுக்கொடுக்கும் திறனும் வாழ்வில் அதிகப்படியான முக்கியத்துவத்தை அளிக்கும். அறிவும் ஆன்மீகமும் உங்கள் வாழ்வை சரியான விதத்தில் அமைக்க உதவும். எதிரான சூழ்நிலைகளை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளும் ஆபத்து உங்களிடம் உண்டு. எப்போதும் வெற்றியின் அரவணைப்பில் இருப்பவர் நீங்கள். செப்டம்பர் மாதம் பிறக்கும் குழந்தைகள் வைட்டமின் டி குறைபாடு கொண்டிருப்பார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் பத்து. அதில் உள்ள ஒன்று என்ற எண்ணின் அதிர்வே உங்கள் வாழ்வை ஆக்ரமிக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் இருப்பாள். ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டால், அடைந்தே தீருவீர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவது உங்களது குறை. பழி தீர்ப்பது, வஞ்சிப்பது உங்களோடு பிறந்த குணங்கள். உங்கள் துறையில் புகழ்பெற்ற தலைவராக வாய்ப்பு அதிகம். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள், ஆஸ்துமா தொல்லையினால் அவதிப்படுவார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
நவம்பர்
நவம்பர் மாதத்திற்கான எண் 11. இரண்டாம் எண்ணுக்கான அதிர்வு உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும். ஆம், நீங்கள் உணர்வுப்பூர்வமானவர். நேர்மறை சிந்தனையுடைய மனிதராக விளங்குவீர்கள். உணர்ச்சிகரமே உங்களை ஆரோக்கிய பிரச்னையில் சிக்க வைக்கும். மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றை கடந்து வந்துவிட்டால், மற்றவர்களை ஊக்குவித்து தூண்டி உயர்த்தக்கூடிய நல்ல ஆசானாக திகழ்வீர்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 12. மூன்றாம் எண்ணே உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். யதார்த்தமாக யோசிக்கும் தத்துவவாதி. நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். சில நேரங்களில் பொறுப்புகளை குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பீர்கள். உங்களை சுற்றியிருக்கும் அதிர்ஷ்டத்தின் காரணமாக அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருக்கும்.