நாடு முழுவதும் இன்று தாதியர்கள், வைத்திய உதவிச் சேவையாளர்கள் மற்றும் குறைநிரப்பு வைத்திய சேவையினரும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நாளை காலை 7 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பின்வரும் பொதுவான கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கான சுகயீன விடுமுறை போராட்டம்
6 வருடங்களில் தர உயர்வை பெறல், தாதியர்கள், வைத்திய உதவியாளர் சேவை குறைநிரப்பு வைத்தியசேவை பட்டதாரிகளின் சம்பளத்தை உத்தியோகரீதியான தொழிலுக்குரிய சம்பளத்தை பெறல், சம்பள முரண்பாட்டை தீர்க்க ரணுகே சம்பள மீளாய்வு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை உடனடியாக அமுல்படுத்த கோரல், இழந்த பதவிநிலையை மீளக்கோரல், ரூபா 3000 ஆக உள்ள விசேட படியை ரூ 6000 ஆக உயர்த்துதல், வழங்கப்பட வேண்டிய மீதி, மேலதிக நேர கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குதல், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது