புகையிரத சேவைகள் சங்கம் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் சங்கம் என்பன நாளை நள்ளிரவு முதல் திட்டமிட்டவாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சேவைகள் சங்கத்தினர் குறித்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள வீதிச் சட்டம் மற்றும் அதிகரிக்கப்பட்ட அபராதம் என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பேருந்துகள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத் தினத்தினை முன்னிட்டு அரச போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ள இந்த சூழலில் குறித்த புகையிரத சேவைகள் சங்கம் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் சங்கத்தினரின் இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.