பல நேரங்களில் நாம் செய்யும் பல விஷயங்கள் வேறு யாரோ ஒருவரை போல இருக்க கூடும். பெரும்பாலும் இது நமக்கு பிடித்த செயலாக தான் இருக்க கூடும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இது போன்ற செயல்கள் இயல்பாகவே நமக்கு ஏற்பட கூடும். இதை பல நேரங்களில் நாம் மறுப்பதுண்டு.
ஆனால், உண்மை என்னவெனில் நமக்கு தெரியாமலே இது போன்ற செயல்களை செய்து வருவது தான். குறிப்பாக ஆண்கள் பெண்களிடம் ஒரு சில விஷயங்களை பெரிதும் விரும்புவார்கள். இவற்றை அப்படியே ஆண்களும் செய்வார்கள். இந்த பதிவில் பெண்களை போலவே ஆண்களும் செய்ய கூடிய 8 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
ஏக்கம்
ஆண்களுக்கும் பெண்களை போலவே பல விஷயங்களில் ஏக்கம் உண்டு. உதாரணமாக தன்னை ஒருவர் ரொமான்டிக்காக ப்ரபோஸ் செய்ய வேண்டும், தனக்கு பிடித்த பரிசுகளை வாங்கி கொடுக்க வேண்டும், போன்ற செயல்களை யாராவது செய்ய மாட்டார்களே என்கிற ஏக்கம் இருக்கிறது.
செல்பி
தற்போதைய கால கட்டத்தில் பெண்களை விடவும், ஆண்களே தாறுமாறாக செல்பிக்களை எடுத்து குவிகின்றனர். பெண்களை மட்டுமே கவர்ந்த விஷயமாக இருந்த இதை ஆண்களும் அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டி பிடித்தல்
பல ஆண்களுக்கு இந்த பழக்கம் உள்ளது. அதாவது, தூங்கும் போது பின்னோக்கி கட்டி பிடிப்பது. இது பெண்களிடம் உள்ள பழக்கம் தான். என்றாலும், பல ஆண்கள் இதை விரும்புகிறார்கள். மேலும், இவ்வாறு கட்டி பிடித்து தூங்கும் போது அதிக சந்தோஷம் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
புரளி பேசுதல்
பெண்களுக்கு மட்டுமே புரளி பேசுதல் உரித்தான செயல் என பலர் நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி கிடையாது. ஆண்களும் இந்த செயலில் மிக சிறப்பாக செயல்படுகின்றனர். யாரையாவது வைத்து புரளி பேசுவதில் ஆண்களும் வல்லமை மிக்கவர்கள்.
பெண்களின் பொருட்கள்
பல வீடுகளில் இது போன்று நடப்பதுண்டு. அதாவது, பெண்களின் அழகு சாதன பொருட்களை அப்படியே எடுத்து கொண்டு ஆண்களும் பயன்படுத்துவார்கள். குறிப்பாக ஷாம்பூ, ஃபேஸ் கிரீம், பாடி லோஷன் போன்றவற்றை கூறலாம்.
ஓவர் நடிப்பு
ஏதேனும் தவறு செய்தால் பெண்கள் மட்டுமே அதிகமாக நடிப்பார்கள் என பலர் நம்புகின்றனர். ஆனால், பெண்களை விடவும் அதிகமாகவே ஆண்கள் நடிப்பார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மிகவும் யதார்த்தமாகவும், பிறர் நம்பும் படியும் ஆண்கள் நடிப்பதுண்டு.
இடுப்பில் கை வைப்பது
புகைப்படம் எடுக்கும் நேரங்களில் பல ஆண்கள் தங்களது இடுப்பில் கை வைத்து கொள்வர். இது பெண்களை போலவே ஆண்கள் அவர்களிடம் இருந்து காபி அடிக்க கூடிய செயலாகும். பெரும்பாலான ஆண்களுக்கு இது பிடித்தமான ஒன்று என அவர்களே கூறியதுண்டு.
குழந்தை தனம்
பல படங்களில் பெண்களுக்கு மட்டுமே அதிக குழந்தை தனம் இருப்பதாக காட்டி இருப்பார்கள். ஆனால், அது அப்படி இல்லை. பெண்களை போலவே ஆண்களுக்கும் குழந்தை தனம் அதிமாகவே உள்ளது. ஆண்களிடம் உள்ள குழந்தை தனத்தை வெளியில் விட்டால் அவ்வளவு தான்.