யாழ். நவகிரி பகுதியில் பாடசாலை சிறுவன் கை குண்டொன்றை எடுத்து விளையாடிய போது அது வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
படுகாயமடைந்த 15 வயதுடைய சிந்துஜன் எனும் சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் விசேட அதிரடிப்படையினர் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர்கள் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
குறித்த கைக்குண்டு அப்பகுதிக்கு எப்படி வந்தது என்றும், தாக்குதல் நடத்தும் நோக்கில் யாராவது கொண்டு வந்து அப்பகுதியில் கைவிட்டு சென்றார்களா என்பது தொடர்பிலும் பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.