முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது என நிரூபிக்கும் வகையில் ஆதாரம் வெளியாகி உள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் அப்படி எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அது தொடர்பான ஆவணங்களுக்கு தனக்கு கிடைக்கவில்லை என கோத்தபாய தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோத்தபாயவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அறிக்கையை அவரிடம் வழங்கியதனை உறுதிப்படுத்தும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் கோத்தபாய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியாகி இருந்தன. இது தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை என கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தனது தந்தையை கொலையை செய்தமை தொடர்பில் கோத்தபாயவுக்கு எதிராக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.