அறிவியலில் தினம் ஒரு அதிசயம் நடந்தபடி உள்ளது. இந்த நிலையில் பிறக்காத குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததை உங்களால் நம்ப முடியுமா? ஆம், தாயின் கருவில் இருந்து குழந்தையை வெளியில் எடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை நமது பாஷையில் சொல்லப் போனால் “இது ஒரு மெடிகல் மிராக்கில்” ஆகும்.
இதன் வெற்றிக்கு பிறகு, மருத்துவ வரலாற்றில் இந்த வழக்கு ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அறிவியலும் தொழில் நுட்பமும் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
பிறப்புக் குறைபாடு
26 வயது பெண்மணி ஒருவர் கருவுற்றிருந்தார். அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள் அவருக்கு ஒரு துயரமான செய்தி காத்திருந்தது. அதவது கருவில் உள்ள குழந்தைக்கு ஸ்பைனா பிஃபிடா என்னும் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஸ்பைனா பிஃபிடா என்பது முதுகு தண்டுவடத்தை சுற்றியுள்ள முதுகெலும்பு மற்றும் சவ்வுகளின் முழுமை பெறாத ஒரு பிறப்புக் குறைபாடாகும்.
என்ன பிரச்சினை?
20 வாரங்களில் செய்யக் கூடிய வழக்கமான ஸகேனில் கருவில் உள்ள குழந்தையின் தலை சரியான அளவில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஸ்பைனா பிஃபிடா பாதிப்பின் காரணமாக, குழந்தை நடப்பதில் பாதிப்பு ஏற்படலாம் என்பதும் கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவர்கள், இந்த தம்பதிக்கு கருக்கலைப்பை பரிந்துரைத்தனர்.
கருப்பை அறுவை சிகிச்சை பரிந்துரை
கருக்கலைப்பை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், மருத்துவர்கள் கருப்பை அறுவை சிகிச்சை என்னும் புதிய சிகிச்சையைப் பற்றி கூறினர். இந்த வகை சிகிச்சையில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே, குழந்தையின் பிரச்சினையை சரி செய்வது என்று கூறினார். அதாவது, குழந்தையை தாயின் கருப்பையில் இருந்து வெளியில் எடுத்து, அந்த குழந்தையின் முதுகுத்தண்டு பிரச்சினையை சரி செய்து, மீண்டு தாயின் கருவில் வைப்பது தான் இந்த சிகிச்சை. இந்த சிகிச்சை மூலம் குழந்தை சாராசரி வாழ்க்கையை வாழ இயலும்.
குழந்தை மறுபடி கருவில் சேர்ப்பு
தாயின் கர்ப்ப காலம் முடிய எதுவாக, அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தை மீண்டும் தாயின் கருப்பைக்குள் வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்ததை முன்னிட்டு, மருத்துவர்கள், இந்த வகை அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். பொதுவாக இது போன்ற பிறப்புக் குறைபாடுகள் கண்டறியப்படும்போது , 80% பேருக்கு கருக்கலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, மேலே கூறிய சிகிச்சையை மேற்கொள்வதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.