தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இலங்கை அரசியலில் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும்15ஆம் திகதி விசேட செய்தி ஒன்றை வெளியிட ஆயத்தமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்ட தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
திடீரென வெளியாகும் தகவலை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சக ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தாண்டு தேர்தல் ஆண்டு என பல தடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.