வரலாற்றில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஹார்வர்ட் பேராசிரியர் ஷெபர்ட் டோலமன் தலைமையில் இயங்கிய குழு, தொடர்ச்சியாக 8 தொலைநோக்கிகளை இணைத்து இந்த படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாக நடைபெற்ற முயற்சியின் பலனாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கருந்துளையின் அளவானது சூரிய குடும்பத்தின் மொத்த அளவை விட பெரியது என்பதுடன் சூரியனை விட 6500 கோடிக்கும் அதிக எடை கொண்டது எனவும் தெரியவருகிறது.
இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் Monster என்று கூறியுள்ளதுடன், இதன் புகைப்படத்தை பார்க்கும் போது தியரி அடிப்படையில் விஞ்ஞானிகள் வகுத்து வைத்திருந்த உருவத்துடன் ஒத்து போவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளதாக லண்டன் யுனிவர்சிட்டியின் ஆய்வாளர் டாக்டர் ஜிரி யூன்சி குறிப்பிட்டுள்ளார்.