சுவைகள் ஆறு வகைப்படும். மற்ற சுவைகளை காட்டிலும் இனிப்பு சுவையே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக காலம் காலமாக வந்துள்ளது. அதிலும் இனிப்புகள் நிறைந்த உணவுகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம்.
சர்க்கரை சாப்பிடுவதால் பல அபாயங்கள் நமது உடலுக்கு ஏற்படும். ஆனால், அவற்றின் தாக்கம் உடனடியாக வெளிப்படாது. சர்க்கரை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்னென்ன என்பதை இனி அறிவோம்.
சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.
நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும்.
இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.
செரிமான மண்டலம்…
நாம் சர்க்கரை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலாத்தை அடைந்து விடும். சிறுகுடலில் உள்ள நொதிகள் அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தின் வழியாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி, இறுதியில் அவை ஆற்றலாக மாறி விடும்.
கணையம்
கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இன்சுலின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, நீங்கள் அதிக அளவில் சர்க்கரை சாப்பிட்டால் அவை உடலின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதை இவை உணர்த்துகிறது.
இன்சுலின் அளவு முக்கியம்
சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி சீர்கேடு அடையும். அதாவது, இவை ஹார்மோன்களிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையே இவை உணர்த்துகிறது. இதனால், பல வித நோய்களின் வருகை படிப்படியாக அதிகரிக்க தொடக்கி விடும்.
வயதான தோற்றம்
மிக விரைவிலே வயதானவரை போன்று மாற்ற கூடிய தனித்தன்மை இந்த சர்க்கரைக்கு உள்ளது. அத்துடன் சருமத்தின் அழகும் மெல்ல மெல்ல குறைய தொடங்கி விடுமாம். சர்க்கரை அதிகம் சாப்பிடுகிண்றீர்கள் என்பதை உங்களின் முக சுருக்கங்களை வைத்தே கண்டறிந்து விடலாம்.
கவனம் அவசியம்..!
மனிதனின் மனிதனின் நாக்கு ஒரு முறை ஒரு பொருளை சுவை கண்டு, பிடித்து விட்டால் அதனை அவ்வளவு சீக்கீரம் விட தோணாது. ஏனெனில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி குறைந்த அளவில் சர்க்கரையை எடுத்து கொண்டால், எந்த வித பெரிய ஆபத்தும் வராது. மீறினால் பிரச்சினை உங்களுக்கு தான்.