வாட்ஸப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளமையினால் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருப்பமில்லாத வாட்ஸ்அப் குழுவில் ஒருவர் இணைக்கப்படுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய வசதியை வழங்கியுள்ளது.
அதன்படி, யார் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும்.
இந்த வசதியைப் பயன்படுத்த, அக்கவுண்ட் >பிரைவசி >குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.
அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (Nobody, My Contacts or Everyone) என்கிற தெரிவில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
Nobody என்கிற தெரிவை தேர்வுசெய்தால், குழுவில் இணைக்கப்படும் நபருக்கு இன்வைட் குறுந்தகவல் வரும். அந்த குறுந்தகவலை பார்த்து, விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.
குறித்த இந்நத தகவலானது இன்னும் சில நாட்களில் அமுலுக்கு வறுமென வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.