68 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாட்டை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் சூப்பர் மூனை பார்த்து ரசித்துள்ளனர்.
இதன் போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை பார்க்க முடியும் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் நிலா பூமியை சுற்றி வருகிறது. எனினும் நேற்றைய தினம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 509 கிலோ மீட்டர் தூரத்தில் நிலா பூமிக்கு மிக அண்மித்து இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நிலவு பூமிக்கு மிகவும் அண்மித்து வருவதானது பேரழிவுகளை ஏற்படுத்தும் என தாய்லாந்து வானியல் வல்லுனரான சோராஜா நுவன் யு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது உலக நாட்டு மக்களை பீதியின் உச்சத்துக்க கொண்டு சென்றுள்ளது. ஏனெனில் 2004ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமி குறித்து வானியல் வல்லுனரான சோராஜா நுவன் யு மிக துல்லியமாக கணித்திருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த எச்சரிக்கையின் காரணமாக உலக மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் மற்றும் பீதியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.