குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
அரிசி – 30 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்
டால்டா, நெய், அல்லது ரீபைண்ட் ஆயில்
செய்முறை :
அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.
அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.
ஜாங்கிரி பிழியும் ரெட்டில் இல்லாதவர்கள் கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டு விரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கை முறுக்கு பிழிவது போன்றும் பிழியலாம்.