திருகோணமலையில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்திய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் வாவியில், பொலிஸ் பரிசோதகர்களின் குடும்பத்தினர் நேற்று நீராடி கொண்டிருந்த வேளையில், அவ்விடத்திற்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடயத்திற்கு சென்ற பொலிஸ் பரிசோதகர்கள் இருவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர்களின் முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்த கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.