உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர்கள் ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28), இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 பேரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இருந்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இவர்கள் மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலையே இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.