மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
நேற்று நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சந்தேக நபர்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
சந்தேகநபர் கலந்துகொண்டுள்ள கூட்டம் ஒன்றில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதின் பங்கேற்றிருக்கும் ஒளிப்படம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள ஒளிப்படத்தில் அமைச்சர் ரிசாத் பதியூதினின் கூட்டத்திலும் சந்தேகநபர் பங்கேற்றுள்ளார். அதுதொடர்பில் அமைச்சரிடம் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்த போது, அதற்க்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.