தற்கொலை தாரிகள் வெளிநாட்டவர்கள்!ஒருவர் மட்டுமே இலங்கையர்! ஆனால் இலங்கையில் உள்ளவர்களின் ஒத்துழைப்போடுதான் இந்த மிலேச்சத்தனமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுகளோடு வெடித்து சிதறிய அநேகர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிய வருகிறது. ஆப்கானிஸ்த்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தாத தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இதில் சங்கிரிலா நட்சத்திர விடுதி தற்கொலைதாரி ஶ்ரீலங்காவைச் சேர்ந்த சகரான் ஹசீம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தெமட்டகொடை குண்டை வெடிக்க வைத்துக் கொண்ட சம்பவம் , போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்த போதே நிகழ்ந்துள்ளது. அந்த குண்டு வெடிப்பில் சீசீடீ உதவி போலீஸ் அதிகாரி ஒருவரும் இரு காண்ஸ்டபிள்களும் உயிரிழந்துள்ளனர் இன்னொரு போலீஸ் கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அங்கு குண்டை வெடிக்கச் செய்து கொண்ட மூவர் இறந்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.
தெகிவளை குண்டு வெடிப்பின் பின் ஒருவரும் பின்னர் நால்வரும் கைதாகியுள்ளனர். கைதாகியுள்ளோர்கள் இலங்கை முஸ்லிம்கள்.
கொழும்பில் நடந்த எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரிலா ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பர் அறைகளில் தங்கிய நபர்கள். சுமார் 25 கிலோ வெடிமருந்தை வைத்திருந்துள்ளார்கள். அதில் ஒருவரே அங்கே உள்ள உணவு விடுதியில் வைத்து தன்னை தானே வெடிக்க வைத்துள்ளார். குறித்த 5 நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்கர்கள் பலர் இறந்துள்ள நிலையில். இந்த தாக்குதலை நடத்தியது, “தவாஹித் ஜமாத்” என்னும் இலங்கையில் இயங்கும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புதான் என்று பொலிசார் கருதுவதாக செய்திகள் கசிந்துள்ளது.
இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி கிடைத்துள்ளதாகவும். இந்த அமைப்புக்கு சர்வதேச முஸ்லீம் பயங்கரவாதிகளோடு தொடர்பு இருந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மொகமட் சஹரான் என்னும் நபர் உள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் அறியப்படுகிறது. கிறீஸ்தவ தேவாலயங்களையும், வெளிநாட்டவர்கள் கூடும் சுற்றுலா மையங்களையும் தாக்குவதே இவர்களது நோக்கமாக இருந்தாலும். ஏன் தெமடகொட மற்றும் தெகிவளை ஆகிய இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளது. இவர்களில் பலர் இலங்கையில் நிலை கொண்டுள்ள நிலையில். சிலர் தம்மை பொலிசார் தேடி கண்டு பிடித்துவிடுவார்கள் என்று நினைத்து. தம்மிடம் உள்ள வெடி பொருட்களை வெடிக்க வைத்து இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் உள்ள சில முஸ்லீம்களும் அரசியல் தலைவர்களும் இணைந்தே இந்த கொடூரக் கொலைகளை அரங்கேற்றியுள்ளார்கள். இதில் இவர்கள் சிங்கள தேவாலங்களை ஏன் தாக்கவில்லை என்பது பெரும் சந்தேகங்களை கிளப்பும் விடையமாக உள்ளது. சிங்களவர்களில் கை வைத்திருந்தால், அவர்கள் உடனே திருப்பி அடிக்க ஆரம்பித்திருப்பார்கள். முஸ்லீம்களை வெட்டி தள்ளி இருப்பார்கள். இதன் காரணத்தால் தான் தமிழர்களை இவர்கள் குறி வைத்தார்களா ?என்ற சந்தேகங்களும் எழுகிறது அல்லவா ? கொச்சிக் கடை தேவாலயம், தெகிவலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் இடம். இங்கே இவர்கள் தாக்குதல் நடத்த என்ன காரணம் ?
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் தேவலயத்திற்கு வெளியே முதுகில் பெரிய பை ஒன்றுடன் நீண்ட நேரமாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். ஏன் இங்கே நிற்கிறீர்கள் தேவாலயத்திற்கு செல்லலாமே என்று ஒருவர் கேட்டவேளை. தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதற்காக காத்து நிற்கிறேன். அதன் பின்னர் உள்ளே செல்வேன் என்று அவர் தமிழில் கூறியுள்ளார். பின்னர் குறித்த நபர் தேவாலயத்தை நோக்கி சென்றுள்ளார். அவர் வெளியே காத்து நின்றது தொலைபேசி அழைப்புக்காக அல்ல. நிறைய மக்கள் தேவாலயத்தினுள் சென்றபின்னர் உள்ளே செல்லவே. அப்படி சென்றால்தான் பெருந்தொகையாக மக்களை கொல்ல முடியும்.
ஆனால் தேவாலய மதகுருமார்கள் இவரது நடமாட்டத்தில் சந்தேகப்பட்டு அவரைவிசாரிக்கமுற்படுகையிலேயே குண்டினை வெடிக்கச் செய்துள்ளார். இதனால்தான் தேவாலயத்துக்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் பெருமளவில் பலியாகியுள்ளனர்.