‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ – என்ற சரண கோஷத்தில், ‘ஓம்’ – என்பது சரணவ மந்திரமாகும். சுவாமி என்பது முக்தணங்களான நஜோ – தமோ – ஸ்தவ தணங்களை ஜயித்து, இதனை அகற்றவல்லது ‘சுவாமி’ என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால், ஓம் சுவாமி என்றாலே சுபம் தருவதாகும். அடுத்து, சரணம் – என்பதற்கான விளக்கத்தைக் காண்போம்.
‘ச’ – என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக்கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் ‘சத்ந சம்ஹாரம்’ – என்பது பொருள்.
‘ர’ – என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தரவல்லது என்று பொருள்.
‘ன’ – என்ற எழுத்திற்கு சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள்.
‘ம்’ – ‘முத்ரா’ – என்ற எழுத்து துக்கங்களைப் போக்க வல்லது என்றும், சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்றும் பொருள்படும்!
ஆகையால் நம்முடைய நாபிக் கமலத்திலிருந்து எழும் பிராணவாயுவை இதயமார்க்கமாக செலுத்தி நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து, ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!…’ என்று ஒலிக்கும்போது மூலமந்திர ஒலியுடன் நம் காமக்கிராதிகளை அழித்து, ஞானத்தைத் தர ஸ்ரீ எல்லாம்வல்ல ஐயப்பனைச் சரணடைகின்றோம் என்பது பொருள்!!