வத்தளையில் சந்தேகத்திடமான முறையில் மர்மநபர்கள் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
வத்தளை, நாயக்கந்த பகுதியிலுள்ள தேவாலயங்களை கண்காணிக்கும் செயற்பாடுகளில் இந்த மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து வத்தளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்னர்.
நாயக்கந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்களும், பாடசாலைகளும் அதிகம் உள்ள பகுதியாகும். இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் குழப்ப நிலை அடைந்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் வத்தளை பகுதியில் மர்மான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து வத்தளை பொலிஸ் பொறுதிபதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனினும் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தீவிர விசாரணைகளின் பின்னரே விடுதலை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் தீவிர விசாரணை உட்படுத்தப்படுவதுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சமாக நிலையில் மக்கள் பொது இடங்களில் கூடுவதையோ, கூட்டமாக நின்று பேசுவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.