500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை பற்றி இளையதளபதி விஜய் நேற்று பேசியதை மக்கள் வரவேற்றாலும், அதை கேட்டு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன. 20 சதவீதம் பேர் செய்யும் தவறுகளுக்காக 80 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுருந்தார்.
‘அவ்வளவு கவலைப்பட்டால் அவரே தெருவில் இறங்கி மக்களுக்கு உதவலாமே’ என மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறி, விஜய் ரசிகர்களிடம் சிக்கி கொண்டார். பின்னர் அதே கட்சியில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு வந்துள்ளதாகவும் செய்திகள் வந்தது.
இது ஒருபுறமிருக்க, தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “விஜய் சொன்ன புள்ளி விவரங்கள் முற்றிலும் தவறு” என கூறியுள்ளார்.
“விஜய் சொன்னது போல் 20 சதவீதம் பேர் பணத்தை பதுக்கவில்லை. இந்தியாவில் இந்த தவறை செய்பவர்கள் மிக மிகக் குறைவு. 10% கீழ் தான் இதனை செய்கிறார்கள், அதில் 5% பேர் மட்டுமே அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்” என கூறியுள்ளார்.