இலங்கையின் திக்கந்த வலவ்வ என்ற இடம் பேய்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடம் என கூறப்படுகின்றது.
கம்பஹா கிரிந்திவெல 231 வீதியின் திக்கந்த என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட 100 அறைகளை கொண்ட பேய் மாளிகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நூறு ஏக்கருக்கும் அதிகமாக தோட்ட பரப்பிற்கு நடுவில் மிகவும் உயரமான மலைக்கு மேல் இந்த மாளிகை அமைந்துள்ளது.
இந்த மாளிகையில் கிட்ட 100 அறைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாளிகையின் தற்போதைய உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகின்றது.
அந்த மாளிகையில் தற்போது வரையில் யாரும் வசிக்கவில்லை. தற்போது பாழடைந்து நிலையில் குறித்த மாளிகை காணப்படுகின்றது. இந்த மாளிகையை பார்வையிட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் மாளிகையை பார்ப்பதற்கு கடினமாக உள்ளதென கூறப்படுகின்றது. இலங்கையில் பேய்களுக்கு மிகவும் பிரபலமான இடமாக இந்த இடம்கருதப்படுகின்றது. பேய் வசிக்கும் இடங்களில் முதலாவது இடத்தை இதற்கு வழங்கினால் சரியாக இருக்கும் என கூறப்படுகின்றது.