தேவாலய பணியாற்றுவதற்காக இலங்கைக்கு வந்த அவுஸ்ரேலிய பிரஜைகளாக தாய் மற்றும் மகள் ஆகியோர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மானிக் சியரியாரச்சி மற்றும் அவரது 10 வயது மகள் அலெக்ஸாண்ட்ரியா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார்.
தேவாலய தொண்டாற்றுவதற்காக நீர்கொழும்பு தேவாலயத்தில் அவுஸ்ரேலிய பிரஜைகள் நால்வர் விஜயம் செய்து இலங்கையில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தேவாலய பணியில் கடும் வேலையில் இருந்திருப்பர்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் நீர்கொழும்பு தேவாலயத்திற்குள் சிக்கிய இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய இருவர் (50 வயது மற்றும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள்) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.