Loading...
சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடையினால் எவ்வித பயனும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
வீ.பீ.என் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அநேகமானவர்கள் இந்த சமூக ஊடகங்களை தற்பொழுதும் பயன்படுத்தி வருவதாகவும் தாமும் இதனை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் பகிரங்கமான ரகசியமாகவே தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...