நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, உடனடி அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்கு இடமாக நடமாடித்திரியும் நபர்கள், சந்தேககத்துக்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக எங்காவது வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் என்பன தொடர்பில், 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கங்களுக்கு எந்நேரமும் அறிவிக்க முடியும்.
இதன்பிரகாரம்,
அவசர அப்புறப்படுத்திகள் மற்றும் அவசர அம்புலன்ஸ் – 110,
பொலிஸ் அவசர சேவைகள் (மொபைல்) – 112,
இராணுவ நடவடிக்கை அழைப்புப் பிரிவு (இலங்கை இராணுவம்) – 114, கொழும்பு மா நகர சபை நடவடிக்கைப் பிரிவு – 115,
இலங்கை விமானப்படை அவசர சேவைகள் – 116,
அனர்த்த முகாமைத்துவத்திற்கான அழைப்பு மையம் – 117,
தேசிய ஆதரவு சேவை (பாதுகாப்பு அமைச்சு) – 118,
பொலிஸ் அவசர நிலை – 119 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அத்துடன், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடி மருந்துகள் ஆகியவற்றைக் கண்டால்,
0112434251 என்ற இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களும் பயணிகளும் வேண்டப்பட்டுள்ளனர்.