Loading...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்து, காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வும், பிரார்த்தனையும் வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழகம், மயான அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், நரசிங்கர் ஆலய நிர்வாகசபை, கலைமகள் முன்பள்ளி, சனசமூக நிலையம், கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இறந்தவர்களிற்கு மெழுகுவர்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தபட்டு, ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது.
Loading...
நிகழ்வில் கிராம மக்கள், இளைஞர்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Loading...