Loading...
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது.
இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
Loading...
இந்நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோய் அரியரட்னம், குறித்த தாக்குதலில் அந்தோனியார் திருச்சுரூபம் எந்தவித சேதமும் இன்றி அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
Loading...