திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஒருவரை அடுத்த மே மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(29) உத்தரவிட்டார்.
ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 2012 ஆம்ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புகளை பேணிவந்துள்ளதோடு குச்சவெளி பகுதிக்கு பொறுப்பு தாரியாக செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் விடயங்கள் தொடர்பான ஆவணங்களுடன் மடிக்கனணியொன்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.