அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜெர்மனி சென்று சேர்ந்துள்ளார். கிரீசிலிருந்து ஜெர்மனி சென்றிருக்கும் அவர் அங்கு இரண்டு நாள் தங்கியிருப்பார். எப்போதும் வெற்றிபெறாவிட்டாலும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி ஜனநாயகமே என்று திரு பராக் ஓபாமா கூறியுள்ளார்.
ஜனநாயகம் பிறந்த இடமான கிரீஸ் தலைநகர் ஏதன்சில் உரையாற்றியபோது அவர் அந்தக் கருத்தை தெரிவத்தார். அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பின்கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் எனக் கவலையடைய வேண்டாம் என ஐரோப்பிய தலைவர்கரைக் கேட்டுக்கொண்டார் திரு ஒபாமா.
புதிய அதிபரின் வெளியுறவுக்கொள்கையில் அதிக அளவு மாற்றமிருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். சீரான முறையில் பதவி மாற்றம் இடம்பெறுவதை தமது குழு உறுதிசெய்யும் என்றும் திரு. ஓபாமா தெரிவித்தார். அவ்வாறு தான் ஜனநாயகம் செயல்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உறுதியான முன்னேற்றத்திற்கு எவரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஒவ்வொரு தலைமுறையினரும் முன்னேற்றத்தைப் பெற பாடுபடவேண்டும்.இருப்பினும் வரலாறு நமக்கு நம்பிக்கையளிக்கிறது என்று அதிபர் ஓபாமா குறிப்பிட்டார்.