தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.
குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம் தேவை!
கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14 வயது நிரம்பிய தமிழ்ச்சிறுமி முகம் எல்லாம் தழும்புகளுடன் பெற்றோருடன் , வெளி நோயாளர் பிரிவுக்கு வந்திருந்தாள்.
அவள் அணமையிலேயே பூப்பெய்திஇருந்தால் , அந்த பெண்ணுக்கான பூப்பெய்தல் நிகழ்வு அடுத்த மாதம் இடம்பெற உள்ளதாக தகவல். அதற்கான முன்னாயத்த நிகழ்வாக தமிழ் அழகுக்கலை நிபுணர் ஒருவரிடம் சென்றுள்ளார் .
அங்கு அவருக்கு ஒரு கிறீம் ஒருமாதகாலமாக பூச வேண்டும் என வழங்கப்பட்டிருக்கிறது . அந்த கிறீம் தான் , இந்தக்குழந்தையின் முகத்திற்க்கும் அழற்சிக்கும் காரணம்.
அழற்சியுடன் வந்த சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் , நீங்கள் பாவித்த கிறீம் பற்றி தாயிடமும் சிறுமியிடமும் வினாவியுள்ளனர்.
அந்த கிறீம் பற்றி எதுவுமே அறியதாத தாயும் மகளும் பதிலளிக்க முடியாதவர்களாக இருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் தந்தை ஒரு டப்பியுடன் வந்தார் . இந்தக்கிறீம்மையே பாவித்தார்கள் என்றனர்.
அந்த டப்பியில் பெயரோ , உள்ளடக்கமான தாதுப்பொருட்களின் விபரமோ இருக்கவில்லை. இதானால் சிறுமிக்கு எந்த தாதுப்பொருளால் அழற்ச்சி ஏற்பட்டது என அறியமுடியவில்லை .
உடனடியாக வைத்தியர்கள் அந்த கிறீம் டப்பியை மத்திய ஆய்வுகூடத்திற்க்கு அனுப்புவைத்தனர்.
அங்கு கிறீம் பரிசீலனை செய்யப்பட்டு , அது தொடர்பாக வைத்தியர்களுக்கு அறிக்கையிடப்பட்டது.
அதில். பிளீச்சிங் செய்வதற்கான தோலை அரிப்படைய செய்வதற்கான தாதுப்பொருள் அதிதளவில் கலக்கப்பட்டிருப்பது கண்டிபிக்கப்பட்டது. அத்தோடு தோலின் பாதுகாப்பு வேலி , படைகளை அழிவடைய செய்யத்தக்க இரசானங்களும் கீறீமில் இருப்பது பற்றியும் , சுவிஸ் நாட்டின் சுகாதார பாதுகாப்பு சட்டப்பிரகாரம் பாவிப்பதற்க்கான அனுமதியும் இல்லை என அறிக்கையிடப்பட்டிருந்து.
உடனடியாகவே சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சாதாரணமாகவே நாம் வாங்கும் , யோக்கட் இல் கூட புரதம் , மாப்பொருள் … மற்றும். இதர தாதுக்கள் எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறிக்கப்பட்ட நிலையில், பெருந்தொகைப்பணத்தை , அழகுபடுத்துவதற்க்காக வழங்கும் உங்களுக்கு , தரப்படும் கீறீம் பற்றிய விபரங்களை அழகுக்கலை நிபுணர்கள் என்பவர்கள் மறைப்பதன் பின்னனி என்ன? சற்றே யோசியுங்கள்.
தற்போது வைத்தியர்களால் மேற்படி கீறீம் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்க்காக உணவு மற்றும் ஔடதகட்டுப்பாட்டு திணைக்களத்திற்க்கு அனுப்ப பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கை எவ்வாறு செல்லும் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .
அழகு முக்கியம் தான்! அதிலும் பார்க்க ஆரோக்கியம் அவசியம் நன்பர்களே! பணத்தைக்கொடுத்து நோயை வாங்காதீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துக்கள்!