Loading...
வங்கியில் பணம் எடுப்பதில் கட்டுப்பாடு இருப்பதால் நாடுமுழுவதும் திருமணம் நடத்துவோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதை கருத்தில் கொண்டு, இன்று டில்லியில், பெருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அவர் கூறுகையில்,‘‘பதிவு செய்த வர்த்தகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம்.
Loading...
அதே போல் வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம்.
திருமண ஏற்பாடு செய்துள்ள வீட்டார், மணமகன் அல்லது மணமகள் அப்பா அல்லது அம்மா இவர்களில் ஒருவர், ஏதாவது ஒரு வங்கி கணக்கில் மட்டும் ரூ 2.5 லட்சம் வரை எடுத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டார். அந்த சலுகைகள் நாளை முதல் அமலுக்கு வரும்.
Loading...