நகத் தொற்று பொதுவாக சுகாதாரமின்மை, அளவுக்கு அதிகமாக அழுக்கு, மாசுபாடுகளில் புழங்குவது, செயற்கை இழையால் செய்யப்பட்ட காலுறைகளை அணிவது, வேர்வை சேர்வது போன்றவற்றால் உண்டாகக் கூடியவை.
சில நேரங்களில் உடலில் எதிர்ப்பு சத்து குறைவதாலும், அமிலச் சம நிலை இல்லாமல் போவதாலும்கூட ஏற்படலாம்.
எனினும் நகத் தொற்று நகத்தினை தடிமனாக்குவதோடு சரியாக கவனிக்காமல் விடும் பட்சத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
உங்கள் நகம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் நகத்தை சுற்றிய பகுதிகள் வீங்கி துர்நாற்றம் வீசும். எனவே இவற்றை வீட்டிலிருந்தபடியே சரிசெய்வது எப்படி என்பதை பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
1 : ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆப்பிள் சிடர் வினிகர் உங்களுக்கு பளபளப்பான சருமம் மட்டுமல்ல, இதில் உள்ள அசிட்டிக் அமிலம் புண்களை ஆற்றும். நகத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை இந்த உட்பொருட்கள் மேலும் பரவாமல் தடுக்கக் கூடியவை.
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீர் சரிசமமான அளவில் எடுத்துக் கொண்டு நன்றாகக் கலந்து அதில் உங்கள் விரல்களையோ அல்லது காலையோ முழ்குமாறு வைக்கவும். இதை தினமும் செய்வதால் பாதிக்கப்பட்ட நகங்கள் படிப்படியாக குணமடையும்.
2 :பூண்டு :
நகத் தொற்றிற்கு பூண்டையும் பயன்படுத்தி மேலும் பரவாமல் தடுக்க முடியும். பூண்டில் உள்ள கிருமிநீக்கும் தன்மை பாதிப்படைந்த பாக்டீரியாக்கள் தேங்குவதைத் தடுக்கும்.
இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பற்களை எடுத்து நன்கு நசுக்கி அதனை வினிகரில் கலந்து அந்த கலவையில் நகத்தை 10 முதல் 20 நிமிடங்கள் முக்கி வைக்கவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் தரும்.
3 : எலுமிச்சைச் சாறு :
எலுமிச்சைச் சாறு நகங்களில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுப்பதுடன் நகத்தில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கவும் பயன்படுகிறது.
எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் கிருமித் தொற்றையும் புண்கள் புரையோடுவதையும் தவிர்க்கும். இதில் உள்ள புளிப்பான சிட்ரிக் அமிலம் கிருமிகளை எதிர்த்துப் போராடி தொற்றுக்களைத் தடுக்கக் கூடியது. இதற்கு தினமும் எலுமிச்சை சாறை நகங்களில் தடவி காயவிடுங்கள். ஒரு நாளைக்கு இருமுறை இதை செய்யலாம்.
4.தேயிலை மர எண்ணெய் :
தேயிலை மர எண்ணெய் நகக் கண்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். இது ஒரு இயற்கையான கிருமி நாசனி என்பதால் நகத் தொற்றுக்களுக்கு மிகவும் உகந்த பலன் தரக்கூடியவை.
எனினும் இந்த டீ ட்ரீ ஆயில் உங்களுக்கு உடனடியான பலன்களைத் தராவிட்டாலும் நன்கு நிரூபிக்கப்பட்ட பலன்களைத் தருகிறது.
இந்த டீ ட்ரீ ஆயிலுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்துகொண்டு உங்கள் நகங்களில் பஞ்சைக் கொண்டு தடவி தானாகக் காயவிடுங்கள்.
5.மவுத் வாஷ் :
வாய் கொப்பளிக்கவும் கிருமிகளை நீக்கி சுத்தம் செய்யவும் உதவும் இந்த மௌத் வாஷ்கள் கருமி நாசனி மற்றும் தொற்றுக்களை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது.
இதே தன்மைகள் நகத்தில் ஏற்படும் தொற்றுக்களையும் பூஞ்சைகளையும் கூட நீக்க உதவுகிறது. இந்த மவுத்வாஷ் சிறிதளவு எடுத்து ஆப்பிள் சிடர் வினிகருடன் கலந்து இந்த கலவையை பாதிக்கப்பட்ட நகப்பகுதிகளில் தடவி சிறிது நேரம் விடவும். பூஞ்சை பிடித்த நகங்களை குணப்படுத்த இதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
6.ஓரிகானோ எண்ணெய் : ஓரிகானோ எண்ணெய் நகத் தொற்றுக்களை குணப்படுத்த சிறந்த வழி. வலியைக் குறைக்கும், புண்களை ஆற்றும், பூஞ்சை கிருமிகளை நீக்கும்.
இந்த ஓரிகானோ எண்ணெய் நகத்தொற்றுக்களுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. இதை இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதே அளவு ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அதனை நகத்தில் தடவி பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இவ்வாறு ஒரு வாரத்தில் பல முறை செய்வதால் நகங்களின் ஆரோக்கியம் மேம்படும்.
7.வெந்நீர் : உங்கள் கை மற்றும் நகங்களை எப்போதும் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்களை நீக்கவும் நகத்தின் கீழ் பாக்டீரியா வளருவதைத் தடுக்கவும் உதவும்.
வெந்நீர் உபயோகிப்பதால் உடலில் இரத்த ஒட்டத்தை அதிகரித்து கிருமிகள் அதன்மூலம் வளருவதைத் தடுக்கிறது. வெந்நீரில் சிறிது தேங்காய் எண்ணெயும் எலுமிச்சை சாறும் கலந்து அதில் நகங்களை நனைத்து வைத்தால் பாதிக்கப்பட்ட நகம் தூய்மையடைந்து குணமாகும்.