அவுஸ்திரேலியா-விக்டோரியா மாநிலத்தில் இலங்கை அரசியல்வாதி ஒருவருக்குநிலங்களுடன் கூடிய வீடுகள் இருப்பதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாககொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மனைகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த அரசியல்வாதி ரூபா 462 மில்லியன் செலவிட்டுள்ளார் என்றும் இதற்காக மோசடி செய்யப்பட்ட பணத்தையேபயன்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சு ஒன்றின் செயலாளராக இருந்த அதிகாரிஒருவரே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சின் செயலாளர்,2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தனது மகள் மற்றும் மருமகனின் பெயரில் நிலங்கள், வீடுகளை கொள்வனவு செய்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு அமைப்பு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு வழங்கியமுறைப்பாட்டிற்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளராக இருந்த அதிகாரி தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.