வெடி பொருட்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்குக்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றையதினம் வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்கிடமான 20 வாகனங்களின் 20 இலக்கங்கள் மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் ஒட்டுவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரம், ஹொரவபத்தானை வீதி, தாண்டிக்குளம் வீதி, இரட்டைப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இந்த வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.