2029ஆம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
பூமிக்கு அருகே 2029ஆம் ஆண்டில் விண்கல் ஒன்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது. அபோபிஸ் என்று அந்த விண்கல்லுக்கு பெயர் வைத்து நாசா, 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி மாலை நேரத்தில் பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் என்று தெரிவித்துள்ளது.
அந்த விண்கல்லின் நீளம் 340 மீற்றர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியை அந்த விண்கல் கடந்து செல்லும்போது, பூமிக்கும் விண்கல்லுக்குமான தொலைவு 31 ஆயிரம் கிலோ மீற்றர்களாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் இதனைக் காணலாம் என்றும், பூமிக்கு இந்த விண்கல்லினால் ஆபத்தில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.