Loading...
லிபிய தேசிய படைகளின் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
லிபியாவின் தென் பிராந்திய நகரான சபாஃவில் அமைந்துள்ள, ஜெனரல் ஹலீஃபா ஹப்தர் தலைமை வகிக்கும் லிபிய படைகளின் பயிற்சி நிலையத்தின் மீதே நேற்று(சனிக்கிழமை) இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...
இந்தநிலையிலேயே குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இராணுவத் தளத்துக்குள் இருந்த சிறைச்சாலை தகர்க்கப்பட்டதை இராணுவத் தரப்பினர், சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...