ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்காவிற்கு ஓய்வு அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது.
மலிங்கா இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்யை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் மே மாதம் 12ம் திகதி முடிவடையும் பட்சத்தில் அவருக்கு குறைந்தபட்சம் 6 நாட்கள் ஓய்வு அளிக்க இலங்கை கிரிக்கெட் ஆணையம் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே மலிங்காவிற்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் ஆஷ்தா டி மெல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, மலிங்கா இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர், அதனால் அவர் விடயத்தில் ரிஸ்க் எடுக்க நாங்கள் விரும்பவில்லை, அதன் காரணமாகவே அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தோம்.
ஓய்வுக்கு பின்னர் இங்கிலாந்து,கார்டிப்பில் நடைபெறும் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.