முகத்தை மூடும் ஆடைகளிற்கு தடைவிதிக்கப்பட்டு ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம் மத, அரசியல் தலைவர்களுடன் சில சுற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தடை உத்தரவு முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசும் கவனமாக இருந்தது.
முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், “முகத்தை முழுவதுமாக மறைப்பது முஸ்லிம் மார்க்கம் சொன்னதல்ல“ என அதிரடியாக தெரிவித்திருந்தார் முஸம்மில்.
இந்தநிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் புகைப்படம் இது. குறிப்பாக சிங்கள சமூக ஊடகங்களில் அதிகம் பரவி வருகிறது.
கொழும்பில் முகத்தை மூடியபடி ஒரு பெண் சென்றதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட, தென்னிலங்கை தீவிர போக்குடைய சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் அதை கச்சிதமாக பிடித்துள்ளனர்.